ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ளது. நாளை முதல் பிப்.26ஆம் தேதி போராட்ட ஆயுத்த கூட்டங்களை நடத்துவோம். மார்ச் 1-7ம் தேதி வரை, தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைமை மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளது. இந்த போராட்டத்தால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.