புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சேங்கைதோப்பு பகுதியில் பாலசுப்பிரமணியன்-விஜயலட்சுமி தம்பதி வசித்து வருகிறார்கள். இவர்களுடைய மகன் ஸ்ரீஹரன் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு அறிவியல் மீது அதிக ஆர்வம் இருந்ததால் சிறு வயது முதலே அது சார்ந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு சிறு பொருள்களை கண்டுபிடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது கூகுள் அசிஸ்டன்ட் உதவியுடன் இயங்கும் ரோபோட் ஒன்றினை கண்டுபிடித்துள்ளார். இந்த ரோபோவுக்கு ஸ்ரீஹரன் பட்டி என்று பெயரிட்டுள்ளார்.

இந்த ரோபோ ரயில் வரும் நேரங்கள் இரு ரயில்களுக்கு இடையேயான தூரம் என அனைத்து வகையான கேள்விகளுக்கும் உடனே பதில் சொல்கிறது. இந்த ரோபோவை ரயில் நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் ரிசெப்ஷன் ரோபோவாக பயன்படுத்தலாம். மேலும் இந்த ரோபோவுக்கு உதிரிபாகங்கள் வாங்குவதற்கு அரசாங்கம் தனக்கு உதவி செய்ய வேண்டும் என ஸ்ரீஹரன் கோரிக்கை விடுத்துள்ளார்.