உலகத்தமிழர்கள் பேரவையின் தலைவர் பழ. நெடுமாறன் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாகவும்,  அவர்கள் குடும்பத்துடன் தொடர்பில் இருப்பதாகவும்  இன்று அதிர்ச்சிகரமான ஒரு தகவலை வெளியிட்டு இருந்தார். இந்த தகவல் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.  பழ. நெடுமாறன் கூறிய இந்த தகவலை அடுத்து தற்போது அவரை சிபிஐ விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது.

கடந்த பல்வேறு நிகழ்வுகளில் விடுதலைப் புலிகளுடைய  தலைவராக இருக்கக்கூடிய பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற தகவல் பரவி இருந்த நிலையில், அவருடைய மகனும் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். அவருடைய குடும்பம் என்ன ஆயிற்று ? என்பது மர்மமாகவே இருந்து வந்த நிலையில், தற்போது பழ. நெடுமாறனின் இந்த பேச்சு என்னவாக இருக்கும் ? என்பது பேசு பொருளாகி உள்ளது. இந்த நிலையில் தான் தமிழீழத்தின் தேசிய தலைவர் பிரபாகரன் நலமுடன் இருப்பதாக அவர் தெரிவித்து இருக்கிறார்.

உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். இதுவரைக்கும் அவரைப் பற்றி திட்டமிட்டு பரப்பப்பட்ட ஐயம் இருக்கும். இந்த செய்தி உறுதியாக இருக்கும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். தமிழீழம் பற்றிய விரிவான திட்டத்தை அறிவிக்க இருக்கிறார். அவர் இன்னும் சில நாட்களில் முழுமையாக தமிழத்தை காப்பாற்றுவதற்காக திட்டத்தோடு வெளியே வந்து செய்தியாளர்களை சந்திப்பார் என்றெல்லாம் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் அவரை சிபிஐ விசாரணை நடத்துவதற்கு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பழ.  நெடுமாறன் ஒருவேளை அவருடைய குடும்பத்தினர் சந்தித்திருந்தார் என்றால் எங்கு சந்தித்தார்? பிரபாகரன் எங்கு தங்கி இருக்கிறார் ? அவருடைய குடும்பம் எங்கே இருக்கிறது ?  பிரபாகரன் மகள் எங்கே இருக்கிறார் ? இந்த தகவல்களை சேகரிப்பதற்காக CBI  முன்வந்திருக்கிறது. இன்னும் சற்று நேரத்தில் நேரடியாகபழ. நெடுமாறனை நேரடியாக சந்தித்து விசாரனை நடத்துவதற்கு முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.