இந்தியாவில் புதிய வகை கொரோனா தொற்று வேகம் எடுக்க தொடங்கியுள்ள நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்த வகையில் விமான நிலையங்களுக்கு  வரும்  பயணிகளுக்கு பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியில் பெற்றோருடன்  வசித்து வந்த மூன்று வயது குழந்தை சிவதர்ஷினி மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி  சிறுமி  உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.