தமிழக சட்டமன்றத்தில் தவெக அமைச்சர் ரமேஷின் செயல்பாடுகள் மற்றும் அதிகாரிகளை மிரட்டும் தொனி குறித்து முன்னாள் அமைச்சர் பி.கே. சேகர்பாபு வெளிப்படையாக விமர்சித்துள்ளார். மேலும், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சொத்து முறைகேடு புகார்கள் தொடர்பாகவும் அவர் தனது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார்.

அமைச்சர் ரமேஷ் அதிகாரிகளை மிரட்டும் வகையிலும், “நாங்கள் அதைப் பிடித்துவிட்டோம், கவிழ்த்துவிட்டோம்” போன்ற தற்பெருமை மற்றும் ஆக்ரோஷமான வார்த்தைகளைப் பயன்படுத்தி வருவதாகக் குறிப்பிட்ட சேகர்பாபு, இதுபோன்ற போக்குகள் தற்போது துறை சார்ந்த பணிகளில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

தற்போதைய புதிய நிர்வாகம் மற்றும் அமைச்சரின் ஆளுகை முறை எந்தளவுக்குப் பலனளிக்கிறது என்பதன் உண்மையான “தாக்கத்தை” மதிப்பிட குறைந்தது ஒரு வருட காலம் அவகாசம் வழங்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

முந்தைய திமுக ஆட்சியின் போது மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சொத்துகள் மற்றும் நில ஆக்கிரமிப்பு விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் அதன் தொடர்ச்சியான எப்.ஐ.ஆர், கைது நடவடிக்கைகள் குறித்துச் சேகர்பாபு தனது விரிவான விளக்கத்தையும் பதிலடியையும் பதிவு செய்தார்.

“>

 

அரசியல் களத்தில் மாறிவரும் சூழல்களுக்கு மத்தியில் அமைச்சர்களின் செயல்பாடுகள் மற்றும் முந்தைய அரசின் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முன்னாள் அமைச்சர் அளித்துள்ள இந்த விளக்கம் அரசியல் வட்டட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.