புதுக்கோட்டையில் அமைச்சர் பார்வஸ் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டுக்கொண்ட நிகழ்வை விடியோ பதிவு செய்த ஊடகவியலாளரை, தவெக நிர்வாகி ஒருவர் மிரட்டியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும், கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. ஊடகங்களின் சுதந்திரத்திற்கு எதிரான இதுபோன்ற செயல்களைக் கட்சித் தலைமை உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
புதுக்கோட்டையில் அமைச்சர் பார்வஸ் பொதுமக்களைச் சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தபோது, செய்தியாளர் ஒருவர் அதனைத் தனது கேமராவில் பதிவு செய்துள்ளார். அப்போது அங்கு வந்த தவெக நிர்வாகி, எதை ஒளிப்பதிவு செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்று ஊடகவியலாளருக்குக் கட்டளையிட்டதோடு, மிரட்டலும் விடுத்துள்ளார். முக்கியச் செய்தி ஊடகங்களை அச்சுறுத்தும் வகையிலும், அவர்களின் சுதந்திரமான பணியைத் தடையின்றிச் செய்யவிடாமல் முடக்கும் வகையிலும் தவெக நிர்வாகிகளின் இந்த முரட்டுத்தனமான போக்கு அமைந்திருப்பது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.
மக்களுக்காக உழைப்பதாகக் கூறிக்கொள்ளும் கட்சிகள் ஊடகங்களை அடக்க நினைப்பது ஜனநாயகத்திற்குக் கேடு விளைவிக்கும் என்று விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே, தவெக தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் இதில் உடனடியாகத் தலையிட்டு, இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் கட்சியினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, அமைச்சர் பார்வஸின் தற்போதைய பேச்சு மற்றும் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்றும், அதிமுகவுடன் அவர் மறைமுகக் கூட்டு வைத்துள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
This is not good.
@TVKPartyHQ / @BussyAnand must intervene immediately and stop this attitude and attack on media. It’s not healthy for democracy. Media haven’t been neutral but doesn’t mean they should be compromised and silenced.
DMK did this and see where they are.…
— Vignesh (@vignesh_1718) August 8, 2026
“>
வரவிருக்கும் அமைச்சரவை மாற்றத்தின் போது அவர் மாற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தவெகவினரின் இந்த ஊடக அச்சுறுத்தல் சம்பவம் அரசியல் களத்தில் மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது.
