தில்லி மெட்ரோ ரயிலில் பயணி ஒருவர் செய்த வித்தியாசமான செயல் தொடர்பான விடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. மழையில் நனைந்த தனது ஜாக்கெட் மற்றும் கீழாடையை மெட்ரோ ரயில் பெட்டியின் கம்பியில் அவர் தொங்கவிட்டுள்ளார். மெட்ரோ பெட்டியையே துணிகளை உலர்த்தும் இடமாக மாற்றிய இந்தக் காட்சி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மழைக்காலத்தில் நனைந்த ஆடைகளை உடனடியாக உலர்த்த முடியாமல் பயணிகள் பலரும் சிரமப்படுவது வழக்கம். அந்த வகையில், குறித்த பயணி மெட்ரோ ரயிலில் பயணம் செய்தபடியே தனது ஈரமான ஆடைகளை உலர்த்த முயன்றதாகத் தெரிகிறது. இதனை சக பயணி ஒருவர் விடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
விடியோ வெளியானதும், அந்தப் பயணியின் செயலைப் பார்த்த பலரும் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். மெட்ரோ ரயில் பெட்டிக்குள் துணிகளை காயப்போடுவதற்கான புதிய வழியை கண்டுபிடித்துவிட்டதாக சிலர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளனர். இந்தக் காட்சியைப் பார்த்து பலரும் சிரிப்பை வெளிப்படுத்தும் வகையில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
மழைக்காலத்தில் தில்லி மெட்ரோவில் நிகழ்ந்த இந்த வித்தியாசமான சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. பொதுப் போக்குவரத்து வாகனங்களில் பயணிகள் தங்களது தனிப்பட்ட பொருள்களை வைப்பதில் பிற பயணிகளுக்கும் இடையூறு ஏற்படாத வகையில் கவனமாக இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனிடையே, இந்த விடியோ தொடர்ந்து வைரலாகி வருகிறது.
