தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடரின் நிகழ்வுகள் தற்போது மாநிலம் முழுவதும் பொதுமக்களிடையே பெரும் கவனத்தையும் விவாதத்தையும் ஈர்த்து வருகின்றன.

எதிர்க்காளிகளின் குற்றங்களுக்குப் பதிலளிப்பதுடன் நின்றுவிடாமல், ஒட்டுமொத்த அரசியல் களத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வகையில் முதல்வர் அலுவலகத்தின் காய நகர்த்தல்கள் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் குறிப்பிடுகின்றனர்.

குறிப்பாக, தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் மற்றும் சட்டமன்ற விவாதங்கள் இதற்குச் சிறந்த உதாரணமாக அமைந்துள்ளன. ஆளுங்கட்சி அமைச்சர்கள் அடுத்தடுத்து எழுப்பிய கூர்மையான கேள்விகளால், பிரதான எதிர்க்கட்சியான திமுக உரிய பதிலளிக்க முடியாமல் திணறியது. இது வழக்கமான விவாதத்தை விடுத்து, மிகத் துல்லியமாகத் திட்டமிடப்பட்ட ஒரு சதுரங்க ஆட்டத்தைப் போலக் காணப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்பெல்லாம் பொதுமக்கள் பெரிதும் கண்டுகொள்ளாத சட்டமன்ற நிகழ்வுகளை, இன்று அனைத்துத் தரப்பு மக்களையும் நேரலை மூலம் ஈர்க்கும் வகையில் மாற்றியமைத்துள்ளதில் முதல்வர் அலுவலகத்திற்குப் பெரும் பங்குண்டு.

ஒவ்வொரு நாளும் அரங்கேறும் அரசியல் வியூகங்களும் அதிரடி விவாதங்களும் சினிமா படங்களை விட விறுவிறுப்பாக இருப்பதால், மக்கள் ஆவலுடன் இதைக் கவனித்து வருகின்றனர்.

“>

 

அரசியல் களத்தில் நீண்ட கால இலக்கை நோக்கித் திட்டமிடப்பட்டு நகர்த்தப்படும் இந்தச் சக் வியூகங்கள் எதிர்காலத்தில் எத்தகைய திருப்பங்களை ஏற்படுத்தப் போகிறது என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது.