உத்தரப்பிரதேசம் மாநிலம் கன்னோசி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில், வகுப்பறையில் ஆசிரியர் குறட்டைவிட்டுத் தூங்கிக் கொண்டிருக்க, மாணவர்கள் படிப்பதை விட்டுவிட்டு செல்போனில் மூழ்கியிருக்கும் அவல நிலைச்சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகித் தீயாய் பரவி வருகிறது.

கன்னோசி பகுதியில் இயங்கி வரும் ‘காம்போசிட் வித்யாலயா சிக்ரோரி’ அரசுப் பள்ளியில்தான் இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது.

மாணவர்களின் எதிர்காலத்தை வளர்க்க வேண்டிய ஒரு கல்விக்கூடத்தின் வகுப்பறையில், பாடம் எடுக்க வேண்டிய ஆசிரியரே அயர்ந்து தூங்குவதும், அதனைப் பற்றிய கவலையின்றி மாணவர்கள் தங்களது செல்போன்களில் கேம்களையும் சமூக வலைதளங்களையும் உறிந்து பார்ப்பதும் கல்வித்துறையின் நிர்வாகக் கண்காணிப்பு மற்றும் ஆசிரியர்களின் பொறுப்பற்றத் தன்மையைத் திறம்பட வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது.

“>

 

இந்தச் சம்பவத்தின் வைரல் வீடியோ சமூக வலைதளங்களில் பலத்த விவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது கல்வித்துறை அதிகாரிகள் என்ன மாதிரியான கடுமையான நடவடிக்கையை எடுக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது.