​நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில், நடிகை சனம் ஷெட்டி நேரில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஆதரவாக மேடையில் உரையாற்றினார். அப்போது அவர் பேசிய ஒரு குறிப்பிட்ட செய்தி, அங்கிருந்த சிலருக்குக் கடும் கோபத்தையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியது.

​”நான் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியைக் கண்டுவிட்டுத்தான் நேராக இந்த போராட்டக் களத்திற்கு வந்திருக்கிறேன்” என்று சனம் ஷெட்டி கூறியதும், அங்கிருந்தவர்கள் அனைவரும் கொந்தளித்துக் கத்தத் தொடங்கினர். ‘ஜனநாயகன்’ படம் பார்த்தவர்களை ‘ஜோக்கர்ஸ்’ எனக் கூறி, ‘டவுன் டவுன்’ என கோஷமிட்டு சனம் ஷெட்டிக்கு எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.

​அங்கிருந்தவர்கள் சனம் ஷெட்டியைப் பேசவிடாமல் தடுத்துக் கத்திக் கொண்டிருந்த அந்தத் தீவிரமான தருணத்தில், கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவர் சனம் ஷெட்டியை நோக்கி மிகவும் ஆபாசமான முறையில் சைகை செய்துள்ளார். ​அந்த அருவருக்கத்தக்கச் செயல் அங்கிருந்தவர்களால் காணொளியாகப் பதிவு செய்யப்பட்டு, அதில் அந்த இளைஞரின் ஆபாச சைகை தெளிவாகப் பதிவாகியுள்ளது.

இந்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, “ஜனநாயக முறையில் போராட வந்த மேடையில், ஒரு பெண்ணிடம் இப்படி ஆபாசமாக சைகை செய்து நடப்பதுதான் ஒரு மாணவனின் செயலா?” என்று கேள்வி எழுப்பி நெட்டிசன்கள் கடுமையாகக் கொந்தளித்து வருகின்றனர்.