ஒடிசா மாநிலம் பாலேஸ்வர் மாவட்டத்தில் ஏடிஎம் ஒன்றை கொள்ளையடிக்க முயற்சி நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மர்ம நபர்கள் சிலர், தங்கள் வசம் இருந்த மஹிந்திரா தார் வாகனத்தைக் கொண்டு இந்தியா1 ஏடிஎம் இயந்திரத்தை வேரோடு பெயர்த்து, சுமார் 300 மீட்டர் தூரம் இழுத்துச் சென்றனர்.
ஆனால், ஏடிஎம் இயந்திரத்தை முழுமையாகக் கொள்ளையடிக்க முடியாமல், அதனை சாலையோரத்திலேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
இந்த முழுச் சம்பவமும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதன் அடிப்படையில் காவல்துறையும் தடயவியல் நிபுணர்களும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதிர்ஷ்டவசமாக இந்தத் திருட்டு முயற்சியில் பணம் எதுவும் திருடப்படவில்லை.
View this post on Instagram
“>
இருப்பினும், தனித்துச் செயல்படும் ஏடிஎம் மையங்களின் பாதுகாப்பு குறித்து பொதுமக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளதால், பாதுகாப்பு வசதிகளை பலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
