சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் 35-வது பட்டமளிப்பு விழாவில், நடிகர் விஷால் உணர்ச்சிப்பூர்வமான வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தனது ‘தேவி சமூக மற்றும் கல்வி அறக்கட்டளையின்’ மூலம் கல்வி உதவி பெற்றுப் பயின்ற 10 மாணவர்கள் இன்று பட்டம் பெற்றுள்ளனர்.
குறிப்பாக, அதில் தீபிகா என்ற மாணவி கணினிப் பயன்பாட்டியல் இளங்கலை பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ளது, விஷாலுக்குப் பெரும் மகிழ்ச்சியையும் பெருமையையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த வெற்றியை “என் பொண்ணு தங்கப்பதக்கம் வாங்கிருக்கா!” என்று மிகுந்த நெகிழ்ச்சியுடன் நடிகர் விஷால் கொண்டாடியுள்ளார். ஒரு தந்தை நிலையில் இருந்து அந்த மாணவியின் சாதனையை அவர் பாராட்டியது காண்போரை நெகிழச் செய்துள்ளது.
‘என் பொண்ணு தங்கப்பதக்கம்
வாங்கிருக்கா!’இன்று, சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் 35-வது பட்டமளிப்பு விழாவில், தங்களது ‘தேவி சமூக மற்றும் கல்வி அறக்கட்டளையின்’ ஆதரவைப் பெற்ற 10 மாணவர்கள் பட்டம் பெற்றது குறித்தும், அதிலும் முக்கியமாக மாணவர்களில் ஒருவரான… pic.twitter.com/qZmIsznxqC
— SS News Digital (@SSNEWSDigital) July 11, 2026
“>
அறக்கட்டளையின் மூலம் தாங்கள் செய்து வரும் கல்விச் சேவையின் பலன், இன்று ஒரு மாணவியின் இத்தகைய உயரிய வெற்றியின் மூலம் வெளிப்பட்டதை எண்ணி அவர் பெருமிதம் கொள்கிறார்.
