தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள 2027-2028ஆம் கல்வி ஆண்டுக்கான புதிய பாடத்திட்ட வரைவு தற்போது கல்வி வட்டாரத்திலும் அரசியல் அரங்கிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, 6 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான சமூக அறிவியல் வரலாற்றுப் பாடப்பிரிவில் இடம்பெற்றுள்ள “தமிழ்நாட்டு அரசுகள்” என்ற தலைப்பின் கீழ் பல்லவர்கள், சோழர்கள் மற்றும் பாண்டியர்கள் ஆகிய மூன்று பேரரசுகளின் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.

ஆனால், மூவேந்தர்களில் ஒருவரான சேரர்களின் வரலாறு இதில் முழுமையாக விடுபட்டிருப்பது குறித்துக் கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

பண்டைய தமிழகத்தை ஆட்சி செய்த மூவேந்தர்களில் சேரர்களும் அடங்குவர் என்றும், தமிழகத்தின் பல எல்லைப் பகுதிகளை அவர்கள் திறம்பட ஆட்சி செய்துள்ளனர் என்றும் வரலாற்று ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மறுபுறம், கேரளப் பாடத்திட்டங்களில் சேரர்கள் குறித்த தவறான வரலாற்றைச் சொல்லித் தரும் சூழலில், தமிழ்நாட்டுக் குழந்தைகளுக்கும் சேரர்களைப் பற்றிய முறையான புரிதல் இல்லாமல் போனால், எதிர்காலத்தில் சேரர்கள் தமிழர்கள் அல்ல என்ற பொய்யான பிம்பம் கட்டமைக்கப்பட வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கப்படுகிறது.

திட்டமிட்டே சேரர்களின் வரலாறு மறைக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. எனவே, தமிழர்களின் தொன்மையான வரலாற்றைத் சிதைக்காமல் காக்கும் வகையில், வரவிருக்கும் புதிய பாடத்திட்டத்தில் சேரர்களின் வரலாற்றையும் கட்டாயம் சேர்க்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு வலுவான கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

“>

 

வரலாற்றுத் திணிப்புகளுக்கோ அல்லது விடுபாடுகளுக்கோ இடமளிக்காமல், எதிர்கால சந்ததியினருக்குத் துல்லியமான தமிழ் வரலாட்டை வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.