மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள தேவரி பேருந்து நிலையத்தில், பேருந்து ஒன்றில் பயணம் செய்த இளம்பெண் ஒருவருக்கு நேர்ந்த அநாகரிகமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேருந்தில் ஏறிய இளைஞர் ஒருவர், கூட்டத்தைப் பயன்படுத்தி அந்தப் பெண்ணுக்கு அருகில் வந்து தவறான செயல்களில் ஈடுபட முயன்றுள்ளார்.
இதனால் கடும் கோபமடைந்த அந்தப் பெண், துணிச்சலுடன் அந்த இளைஞரைச் சராமாரியாகத் தாக்கி, பலத்த அறை கொடுத்துள்ளார். பெண்ணின் இந்த அதிரடித் தாக்குதலைச் சற்றும் எதிர்பார்க்காத அந்த இளைஞர், பேருந்திலிருந்து குதித்துத் தப்பி ஓடினார்.
இந்தச் சம்பவம் பேருந்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. வீடியோவைப் பார்த்த காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அந்த இளைஞரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
https://www.facebook.com/reel/2106359590260081/?mibextid=ZZyLBr
பாதிக்கப்பட்டப் பெண் காவல்துறையில் முறையான புகார் அளிக்காத நிலையிலும், பொதுவெளியில் பெண்களை அநாகரிகமாக நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். பெண்ணின் இந்த துணிச்சலான செயலுக்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
