ஜாம்ஷெட்பூரில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அலாவுதீன் மஹாலி என்ற பெண் ஊர்க்காவல் படை வீராங்கனை, கடந்த 4  மாதங்களாகச் சம்பளம் வழங்கப்படாததால் ஏற்பட்ட கடுமையான குடும்பப் பொருளாதார நெருக்கடி காரணமாக, கல்லூரி வளாகத்தில் ஃபினிலைக் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சுத்தம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த ஃபினைலை அவர் குடித்துவிட்டுத் தொடர்ச்சியாக வாந்தியெடுத்ததைக் கண்ட சக ஊழியர்கள், அவரைஸஉடனடியாக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்ததால் அவர் அபாயக் கட்டத்தைத் தாண்டினார்.

இச்சம்பவத்தை அறிந்த கல்லூரி முதல்வர், நேரில் சென்று பாதிக்கப்பட்ட வீராங்கனைக்கு உடனடி நிதியுதவி, அங்கு பணியாற்றும் மொத்தம் 135 ஊர்க்காவல் படை வீரர்களுக்கும் நிலுவையில் உள்ள தொகையை விரைவில் வழங்கத் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.