“ஐயோ சாமி.. திருட வந்த இடத்துல இப்படி மாட்டிக்கிட்டேனே, என்னைக் காப்பாத்தி எப்படியாவது கீழே இறக்கிவிடுங்கப்பா!” என்று மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டம் பாலி நகரில் உள்ள மூன்று அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் நள்ளிரவில் கொள்ளையடிப்பதற்காகப் பைப் வழியாக ஏறிய திருடன் ஒருவன், எதிர்பாராதவிதமாக இரண்டாவது மாடி வீட்டின் ஜன்னல் கூரையின் மேல் சிக்கிக்கொண்டு கீழே இறங்க முடியாமல் தவித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நள்ளிரவில் ஜன்னல் கம்பியை உடைக்க முயன்றபோது நிலைதடுமாறி, மிகக் குறுகலான அந்த விண்டோ ரூஃப் (Window roof) மீது உட்கார்ந்தபடியே நடுங்கிக்கொண்டிருந்த அந்த மர்ம நபரை, அக்கம் பக்கத்தினர் கைகாட்டி சத்தம் போடவே ஒட்டுமொத்த ஊர் பொதுமக்களும் அங்கு திரண்டு வேடிக்கை பார்க்கத் தொடங்கினர்.

“>

 

கீழே குதித்தால் கை, கால் உடைந்துவிடும் என்ற பயத்தில் அந்தத் திருடன் ஜன்னல் மேலேயே தஞ்சம் புகுந்த நிலையில், அவனது அலறல் சத்தத்தைக் கேட்டுப் பரிதாபப்பட்ட உள்ளூர் மக்கள், ஏணி மற்றும் கயிறுகளின் உதவியுடன் அவனைப் பத்திரமாகப் மீட்டு கீழே இறக்கினர்;

ஆனால், கீழே இறங்கிய அடுத்த கணமே பொதுமக்கள் அவனுக்குத் தர்ம அடி கொடுத்துப் பிடித்துக் காவற்துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்த விசித்திரமான திருடனின் வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.