பீகார் மாநிலம் பூர்ணியா மாவட்டத்தில், திருமணத்தை மீறிய உறவு தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், ஒரு பெண் தனது கணவருக்குத் தெரியாமல், அவரது உறவினரான  மாமியார் வீட்டுப் பக்கத்து உறவு ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, கணவரால் கையும் களவுமாகப் பிடிக்கப்படுகிறார்.

கணவர் அந்தப் பெண்ணிடம், “தேர்வு எழுதச் செல்வதாகக் கூறிவிட்டு ஏன் இப்படிச் செல்கிறாய்?” என்று கேள்வி கேட்கிறார். அதற்கு அந்தப் பெண், தனது வாகனம் பழுதாகிவிட்டதால் சரிசெய்யச் சென்றதாகச் சமாளிக்க முயல்கிறார். ஆனாலும், கணவர் அங்கேயே அந்தப் பெண்ணின் செயலை வெளிப்படையாகக் கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.

இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அந்தப் பெண்ணின் குடும்ப உறுப்பினர்களும் சகோதரன் மற்றும் சகோதரி அந்த இடத்தில் கூடி, கணவரை எதிர்த்துப் பேசுவது வீடியோவில் பதிவாகியுள்ளது.

“>

 

கணவர் தனது மனைவியின் செயலை அம்பலப்படுத்திய பிறகு, அந்தப் பெண் தனது கணவர் மீது பொய்ப் புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது. இந்த வீடியோவை இணையத்தில் பார்த்த பலரும், அந்தப் பெண்ணின் செயலைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சமூக விழுமியங்களை மீறும் இத்தகைய செயல்களுக்குக் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.