ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் தொடக்க கால நட்சத்திரங்களில் ஒருவரான வேகப்பந்து வீச்சாளர் ஷாபூர் ஜத்ரான், நீண்ட கால உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் காலமானார். 38 வயதான அவர், அரிய வகை நோய் ஒன்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தனது 39-வது பிறந்தநாளுக்கு ஒரு நாள் முன்னதாக உயிர் பிரிந்தது.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட ஒரு முன்னோடியாகக் கருதப்படும் அவரது மறைவு, அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களையும் வீரர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ரஷித் கான், முகமது நபி உள்ளிட்ட சக வீரர்கள் அவரது மறைவுக்குக் கண்ணீருடன் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ரஷித் கான், “வாழ்க்கை இனி உங்களை இன்றி மாறப்போவதில்லை, என் இதயத்தில் உங்களுக்கு எப்போதும் ஒரு தனி இடம் உண்டு” என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். முன்னாள் இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, “உலக கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணியின் எழுச்சிக்கு மிக முக்கியக் காரணமாக இருந்தவர் ஷாபூர் ஜத்ரான்” என்று அவரைப் புகழாரம் சூட்டியுள்ளார்.

“>

 

2009 முதல் 2020 வரை 80 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ள ஷாபூர், ஆப்கானிஸ்தான் அணி உலக அரங்கில் ஒரு வலிமையான சக்தியாக மாறுவதற்கு அடித்தளம் அமைத்தவர்களில் ஒருவராவார். அவரது மறைவு கிரிக்கெட் உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது.