மேகாலயாவில் உள்ள மவ்லின்னாங் கிராமம், ஆசியாவிலேயே தூய்மையான கிராமமாகப் புகழப்படுகிறது. பிரிட்டிஷ் நாட்டுப் பயணியான ராபர்ட் வான் டிராம்ப், இந்த கிராமத்திற்குச் சென்று எடுத்த வீடியோ ஒன்றைச் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், “இந்தியா முழுவதும் குப்பைகள் நிறைந்திருக்கும் என்ற பிம்பம் ஒரு பெரிய ஏமாற்று வேலை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் அனைத்துப் பகுதிகளும் மோசமான குப்பை மேலாண்மையைக் கொண்டிருப்பதாகக் கருதப்படும் பொதுவான தவறான கருத்துக்களை உடைக்கும் வகையில், மவ்லின்னாங் கிராமத்தின் வியக்கத்தக்க தூய்மையையும், இயற்கையையும் அந்த வீடியோ அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.
சுமார் 600 குடியிருப்பாளர்களைக் கொண்ட இந்தக் கிராமத்தில், ஒவ்வொரு 100 மீட்டருக்கும் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. கிராம மக்கள் தினமும் இருமுறை வீதிகளையும் பொது இடங்களையும் சுத்தப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
View this post on Instagram
“>
மேலும், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் புகைப்பிடித்தலுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, கிராமத்தைப் பராமரிப்பதில் மக்கள் கவனம் செலுத்துகின்றனர்.
வடகிழக்கு மாநிலங்களின் இந்தச் சிறப்பான குடிமைப் பண்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் இணையத்தில் பெரும் பாராட்டுக்களைப் பெற்று வருகின்றன.
