மும்பை மாநகரம் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நகரம் என்பதற்குச் சான்றாக, அதீதி தாக்கூர் என்ற பெண்மணி சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள அனுபவம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

இரவு 12:30 மணிக்கு மெரைன் லைன்ஸ் ரயில் நிலையத்தில் தான் பாதுகாப்பாக உணர்ந்ததையும், அங்கு காவலர்கள் பணியில் இருந்ததையும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் பிற நகரங்களுடன் ஒப்பிடும்போது, இரவு நேரத்திலும் பெண்கள் அச்சமின்றி வெளியே செல்லக்கூடிய சூழல் மும்பையில் மட்டுமே இருப்பதாக அவர் தனது வீடியோவில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோவிற்குப் பதிலளித்துள்ள பல சமூக வலைதள பயனர்கள், மும்பை பெண்களுக்குப் பாதுகாப்பான நகரம் என்பதில் தங்களுக்கு உடன்பாடு இருப்பதாகக் கருத்து தெரிவித்துள்ளனர்.

இரவு நேரத்திலும் இயங்கும் பொதுப் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் மிகுந்த சூழல், பெண்களுக்கு ஒருவித நம்பிக்கையையும் பாதுகாப்பையும் தருகிறது என்று பலரும் தங்கள் சொந்த அனுபவங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Aditi Thakur (@_this_is_aditi._)

“>

பெண்கள் எவ்விதத் தயக்கமுமின்றி இரவு நேரங்களில் சுதந்திரமாகச் செயல்படக்கூடிய சூழல் இருப்பதே, மும்பையை மற்ற நகரங்களிலிருந்து தனித்துவமாகக் காட்டுகிறது என்று பலரும் இந்த வீடியோவைப் பாராட்டி வருகின்றனர்.