ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில், பியூட்டி பார்லர் உரிமையாளர் ஒருவர் அங்குள்ள குடிநீரில் போதைப்பொருள் கலக்க முயன்றதாகக் கூறப்படும் அதிர்ச்சி சம்பவம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்தப் பார்லரில் வேலை செய்யும் நான்கு பெண் ஊழியர்கள், தங்களது உரிமையாளர் தங்களுக்குக் கொடுக்கும் குடிநீரில் ஏதோ ஒரு நச்சு அல்லது போதைப்பொருளைக் கலப்பதை கையும் களவுமாகக் கண்டுபிடித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண்கள், உடனடியாக அந்த நபரைக் குத்திக் கிழித்து, செருப்பால் சரமாரியாக அடித்துத் தங்களது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இந்தத் தடியடிச் சம்பவம் அங்கிருந்த கேமராவில் பதிவாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் துறையில் புகார் அளித்துள்ளதைத் தொடர்ந்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை இந்தச் சம்பவம் மீண்டும் எழுப்பியுள்ள நிலையில், ஆபத்தான சூழலிலும் தைரியமாகச் செயல்பட்டு அந்த நபரை எதிர்கொண்ட பெண் ஊழியர்களின் துணிச்சலைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
Viral reports from Rajasthan’s Churu claim a beauty parlour owner was caught on camera allegedly spiking drinking water.
Female employees reportedly confronted him immediately & beat him after discovering the alleged act.
This is how they treat women in their culture. pic.twitter.com/pHZ9O8qXxf
— محمد سلمان فارسی (@AlFarsi1201) July 4, 2026
“>
அதே வேளையில், பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் இதுபோன்ற அக்கிரமங்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
