சாலையில் சென்ற ஒரு பெண்மணியை நாய் ஒன்று மிகவும் ஆக்ரோஷமாகத் தாக்க முயன்ற நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்பொழுது இணையத்தில் பரவி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாலையின் மறுபுறம் நின்று கொண்டிருந்த ஒரு முதியவர், அந்தப் பெண்மணிக்கு நேர்ந்த ஆபத்தைக் கண்டு சற்றும் யோசிக்காமல், பாய்ந்து வரும் வாகனங்களுக்கு மத்தியிலும் தனது உயிரைப் பணயம் வைத்துக் கையை நீட்டி அவற்றை நிறுத்திவிட்டு, அவசர அவசரமாகச் சாலையைக் கடந்து ஓடி வந்துள்ளார்.

அந்த நாயிடமிருந்து அந்தப் பெண்மணியைக் காப்பாற்ற அவர் தீவிரமாக முயன்று, இறுதியாகப் பெண்மணியை நாயின் பிடியிலிருந்து மீட்டுக் காப்பாற்றியும் விட்டார். ஆனால், எதிர்பாராதவிதமாக அந்த வெறிநாய் அந்த முதியவரை மிகக் கொடூரமாகத் தாக்கத் தொடங்கிவிட்டது.

இந்தச் சம்பவத்தில் பார்ப்போரை அதிர வைத்த நெகிழ்ச்சியற்ற விஷயம் என்னவென்றால், தன்னைத் தேடி வந்து காப்பாற்றிய முதியவரை அந்த நாய் கடிக்கத் தொடங்கிய அடுத்த வினாடியே, அந்தப் பெண்மணி ஒரு நொடி கூட அங்கிருக்க விரும்பாமல் பயந்தடித்து அந்த இடத்தை விட்டு ஓடியே போய்விட்டார்.

தன்னை ஆபத்தில் இருந்து மீட்ட அந்த முதியவருக்கு ஏதேனும் உதவி செய்வதோ அல்லது அக்கம்பக்கத்தினரைச் சத்தம்போட்டு உதவிக்கு அழைப்பதோ கூட செய்யாமல், அவரை அப்படியே அம்போவென நாய் வாயில் விட்டுவிட்டுத் தப்பியோடினார். அந்த நாய் முதியவரைத் தொடர்ந்து கொடூரமாகத் தாக்கியதில் அவருக்குப் பலத்த காயங்கள் ஏற்பட்டன. அதன் பின்னரே, அங்கிருந்த ஆண்கள் சிலர் ஓடிவந்து அந்த நாயைக் கடுமையாகத் தாக்கி, அதன் உயிரை எடுத்த பிறகே முதியவரை மீட்க முடிந்தது.

 

View this post on Instagram

 

A post shared by VSNEWS (@vijayasangharshanews)

“>

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், “உதவி செய்யப் போனவருக்கு இந்த நிலைமை தேவையா? அந்தப் பெண்மணிக்கு எவ்வளவுதான் பயம் இருந்திருந்தாலும், அக்கம் பக்கத்தினரையாவது உதவிக்குக் கூப்பிட்டிருக்கலாமே! மனிதாபிமானமே செத்துவிட்டது” என்று நெட்டிசன்கள் தங்களது கடுமையான கண்டனங்களையும் ஆதங்கத்தையும் பதிவிட்டு வருகின்றனர்.