மனதில் உண்மையான பக்தியும், அசைக்க முடியாத நம்பிக்கையும் இருந்தால், வயது என்ற தடைக்கல் மிகச்சிறியதாக மாறிவிடும் என்பதற்குச் சான்றாக ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 116 வயதான ஒரு முதிய பாட்டி, தனது தள்ளாத வயதையும் பொருட்படுத்தாமல் வெறும் பக்தி ஆற்றலை மட்டுமே துணையாகக் கொண்டு திருமலை திருப்பதி ஏழுமலையானைத் தரிசித்துள்ளார். இணையத்தில் வெளியாகி இருக்கும் இந்த அதிசய யாத்திரையின் வீடியோ, பார்ப்பவர்களின் நெஞ்சங்களை உருக வைத்துள்ளது.
Amazing!🙏
A 116-year-old woman from #Karnataka walked to #Tirumala via Alipiri steps,proving that age is only for the body—not for faith.Her unwavering #devotion has inspired thousands.
She Deserves a VIP Darshan for her extraordinary devotion.@naralokesh Garu,pls look this pic.twitter.com/Qiaj2ShNaL
— Temple Connects (@Temple_Connects) July 4, 2026
எக்ஸ் (X) தளத்தில் ‘@Temple_Connects’ என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்தத் தகவலின்படி, அந்தப் பாட்டி திருப்பதியின் புகழ்பெற்ற ‘அலிபிரி நடைபாதை’ வழியாகத் தனது ஆன்மீகப் பயணத்தைத் தொடங்கியுள்ளார். சுமார் 9 கிலோமீட்டர் நீளமுள்ள, மிகவும் செங்குத்தான மற்றும் கடினமான மலைப்பாதையைக் கால்களாலேயே நடந்து கடந்துள்ளார். இந்த நெடிய பயணத்தின் போது அவர் மொத்தம் 3,550 செங்குத்தான படிக்கட்டுகளைக் கடந்து மலை உச்சியை அடைந்துள்ளார். இன்றைய இளம் தலைமுறையினரே சில படிக்கட்டுகள் ஏறினாலே மூச்சுவாங்கித் திணறும் நிலையில், 116 வயதில் இந்த அசாத்திய சாதனையை அந்தப் பாட்டி நிகழ்த்தியுள்ளார்.
இந்த இக்கட்டான பயணத்தில் அவரது குடும்பத்தினர் அவருக்கு முழுத் துணையாக நின்று கைகளைப் பற்றிக் கொண்டாலும், அவருக்கு அசுர பலத்தைக் கொடுத்தது திருப்பதி பெருமான் மீது அவர் வைத்திருந்த அசைக்க முடியாத பக்தி தான். இந்த வீடியோ வெளியான சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான லைக்குகளைக் குவித்து வருகிறது. கமெண்ட் பகுதியில் ‘ஜெய் கோவிந்தா’, ‘ஓம் நமோ வெங்கடேசாய’ எனப் பக்தர்கள் தங்களது பக்திப் பரவசத்தை வெளிப்படுத்தி வருவதுடன், இதுபோன்ற மிக மூத்த குடிமக்களுக்குத் திருப்பதி தேவஸ்தானம் உடனடியாக விஐபி தரிசன வசதிகளைச் செய்து தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
