மத்தியப் பிரதேசத்தின் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில், ஆசிரியர் ஒருவர் மாணவர்களை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதாசுலா கிராமத்தில் உள்ள அந்தப் பள்ளியில், மாணவர்கள் ஆசிரியர்கள் யாரும் இன்றி வகுப்பறையில் அமர்ந்திருப்பதை அறிந்த பெற்றோர்கள், அங்கு சென்று பார்த்தபோது அதிர்ச்சியடைந்தனர்.
ஆசிரியர் வகுப்பறைக்குள் கற்பிப்பதற்குப் பதிலாக, அங்கேயே அமர்ந்து வெள்ளரிக்காய் சாப்பிட்டுக் கொண்டும், கேளிக்கை கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டும் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதைக் கண்டித்த பெற்றோர் ஒருவரிடம், அந்த ஆசிரியர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, மாணவர்களை வலுக்கட்டாயமாக வகுப்பறையை விட்டு வெளியே தள்ளியுள்ளார். மேலும், “நான் அவர்களுக்குப் பாடம் சொல்லித்தரப் போவதில்லை, இனிமேல் அவர்களைப் பள்ளிக்கு அழைத்து வர வேண்டாம்” என்று ஆவேசமாகக் கூறியது வீடியோவில் பதிவாகியுள்ளது.
🚨MP School Shocker: When Asked to Teach,Teacher Pushed the Children Out
Parents visiting a government primary school in Matasula village, Sheopur district, Madhya Pradesh for admissions discovered that children were sitting in the classroom without any teacher.
Instead, the… pic.twitter.com/anbzzqsZn8
— Ramesh Tiwari (@rameshofficial0) July 4, 2026
“>
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்தி வருவதாகவும், தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
