மும்பை புறநகர் ரயிலில் கூட்ட நெரிசலுக்கு இடையே நடந்த ஒரு வேடிக்கையான மற்றும் அதே சமயம் பரபரப்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலத்த மழை பெய்து கொண்டிருந்த நேரத்தில், பயணிகள் கூட்டம் அலைமோதிய ரயிலின் பெட்டிக்குள் திடீரென ஒரு பெரிய கரப்பான் பூச்சி நுழைந்தது.
அதைக் கண்டதும் பயணிகள், குறிப்பாகப் பெண்கள், பயத்தில் இருக்கைகளுக்கு மேலே ஏறி நின்று கூச்சலிட்டனர். இந்தச் சம்பவம் அந்த ரயில் பெட்டியில் சிறிது நேரம் பெரும் குழப்பத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இந்த வீடியோவை ‘எக்ஸ்’ (X) தளத்தில் பலர் பகிர்ந்து வருகின்றனர். ரயிலில் எப்போது என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது எனப் பலரும் கிண்டலாகவும், ஆச்சரியமாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram
“>
“ஒரு சிறிய கரப்பான் பூச்சியைக்கண்டு இவ்வளவு பயப்பட வேண்டுமா?” என்றும், “பெண்கள் பயந்து போய் இருக்கையில் ஏறி நின்ற விதம் வேடிக்கையாக இருக்கிறது” என்றும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பலவிதமான நகைச்சுவையான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.
