உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில், மூடப்பட்டிருந்த ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற இளைஞரை, அங்கிருந்த ரயில்வே பாதுகாப்புப் படை காவலர் கன்னத்தில் அறைந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பைக் மூலம் தண்டவாளத்தைக் கடக்க அந்த இளைஞர் மேற்கொண்ட முயற்சி பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்பதால், கோபமடைந்த காவலர் அவரைத் தடுத்து நிறுத்தி அடித்தது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

பாதுகாப்பு விதிகளை மீறிச் செயல்பட்ட இளைஞருக்கு எதிராகக் காவலர் கையாண்ட இந்த அதிரடி நடவடிக்கைகள் தற்போது இணையத்தில் விவாதங்களை உருவாக்கியுள்ளன.

“>

 

உயிரைப் பணயம் வைத்து இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது இத்தகைய கடுமையான நடவடிக்கைகள் அவசியம்தானா அல்லது கண்ணியமான முறையில் எச்சரித்திருக்க வேண்டுமா எனப் பலரும் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.