மலைப்பாதை ஒன்றில் இளைஞர்கள் சிலர் தங்களது இருசக்கர வாகனங்களில் சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்கள் சென்ற பாதையின் ஓரத்தில், “இப்பகுதியில் கரடிகள் நடமாட்டம் உள்ளது, எச்சரிக்கையுடன் செல்லவும்” என்று அறிவுறுத்தும் ஒரு விழிப்புணர்வு சைன் போர்டு வைக்கப்பட்டுள்ளது.
அந்தப் பாதையில் தங்களது பயணத்தை வீடியோவாகப் பதிவு செய்துகொண்டே வந்த நபர், அந்த சைன் போர்டைப் படித்துக் கொண்டே முன்னோக்கிச் சென்றுள்ளார். அப்போது அவருக்கு முன்னால் பைக்கில் சென்று கொண்டிருந்த இளைஞர்கள், எதிர்பாராதவிதமாக அங்கிருந்த ஒரு ஆபத்தான வளைவில் வண்டியைச் செலுத்த முடியாமல் அப்படியே பள்ளத்திற்குள் விட்டு தலைகீழாக விழுந்துள்ளனர்.
அதிர்ஷ்டவசமாக, எந்தவொரு பெரிய அசம்பாவிதமும் இன்றி சிறு காயங்களுடன் அந்த இளைஞர்கள் உயிர் தப்பினர். பள்ளத்தில் விழுந்த இளைஞர்களை மீட்டெடுத்து, பின்னால் வ்லாக் செய்துகொண்டே வந்த நபர் அவர்களிடம், “ஏன்பா கொஞ்சம் பார்த்துப் போகக்கூடாதா? வளைவு என்று தெரிந்தும் ஏன் இவ்வளவு வேகமா போனீங்க?” என்று அட்வைஸ் செய்தபடி காரணம் கேட்டுள்ளார்.
அதற்கு அந்த இளைஞர்கள் அளித்த விசித்திரமான பதில் தான் தற்பொழுது நெட்டிசன்களைச் சிரிக்க வைத்துள்ளது. அதாவது, “இங்கு கரடி இருக்கிறது என்பதை உணர்த்துவதற்காக அந்த சைன் போர்டில் ஒரு கரடியின் உருவ பொம்மை வரையப்பட்டிருந்தது; வளைவில் திரும்பும்போது எங்கள் கவனம் முழுவதும் அந்தப் போர்டில் இருந்த கரடி பொம்மையின் மீதே இருந்ததால், சாலையைக் கவனிக்காமல் வண்டியைப் பள்ளத்தில் விட்டுவிட்டோம்” என்று அவர்கள் கூறியுள்ளனர்.
View this post on Instagram
“>
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இதைப் பார்த்த நெட்டிசன்கள், “சைன் போர்டில் இருந்த கரடி பொம்மையைப் பார்த்ததற்கே இப்படிப் பள்ளத்தில் விழுந்திருக்கீங்க… ஒருவேளை நிஜக் கரடியைப் பார்த்திருந்தால் என்னவாகியிருப்பீங்க?!” என்று செம்ம நக்கலான கமெண்ட்டுகளைப் பதிவிட்டு கிண்டல் அடித்து வருகின்றனர்.
