இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர், பஜாஜ் பிளாட்டினா மற்றும் பஜாஜ் பல்சர் போன்ற பைக்குகளை ஆஃபர் விலையில் தருவதாகக் கூறி வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
அந்த வீடியோவில் அவர் பைக்குகளின் விலையை “3 லட்சம்”, “5 லட்சம்” என லட்சங்களில் கூற, அதைக் கேட்ட இந்தியத் தமிழ் மக்கள், குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு நிமிடம் மிரண்டு போயினர். வீடியோவில் அவர் பேசுவது அசல் இலங்கைத் தமிழ் என்பதால், ஆரம்பத்தில் சட்டென்று புரியாமல், “நம்ம ஊர்ல என்னடா ஒரே ராத்திரியில பைக் விலை இப்படி ஏறிடுச்சு!” என்று மக்கள் பதற்றமடைந்தனர்.
ஆனால், வீடியோவை முழுமையாகப் பார்த்த பிறகுதான், அவர் குறிப்பிட்டது இந்திய ரூபாய் மதிப்பு அல்ல, இலங்கை ரூபாய் மதிப்பு என்பதும், அந்த ஷோரூம் யாழ்ப்பாணத்தில் உள்ளது என்பதும் தெரியவந்து அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
இந்த விலை வித்தியாசத்திற்குப் பின்னால் இலங்கையின் தற்போதைய பொருளாதாரப் பின்னணி ஒரு முக்கிய காரணமாகும். இந்தியாவில் தற்சமயம் ஒரு பஜாஜ் பிளாட்டினா பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை தோராயமாக 70,000 முதல் 80,000 ரூபாய்க்குள் இருக்கும் நிலையில், இலங்கையில் அதன் விலை 3 லட்சத்தைத் தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.
சில வருடங்களுக்கு முன்பு இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார வீழ்ச்சி மற்றும் அந்நியச் செலாவணி தட்டுப்பாடு காரணமாக, அங்கு அத்தியாவசியப் பொருட்கள் முதல் வாகனங்கள் வரை அனைத்தின் விலையும் பல மடங்கு உயர்ந்துவிட்டது.
View this post on Instagram
“>
இந்திய ரூபாயுடன் ஒப்பிடும்போது இலங்கை ரூபாயின் மதிப்பு குறைவாக இருப்பதும், கடுமையான இறக்குமதி கட்டுப்பாடுகளுமே அங்கு ஒரு சாதாரண பைக் கூட சாமானியர்கள் வாங்க முடியாத அளவிற்கு லட்சங்களில் விற்பனையாவதற்குக் காரணம் என்பதை இந்த வைரல் வீடியோ நமக்குத் தெளிவுபடுத்துகிறது.
