மகாராஷ்டிர மாநிலம் புனேவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய கேதன் அகர்வால் கொலை வழக்கில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. கேதன் அகர்வால் என்பவரை 400 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் தள்ளிவிட்டு மிகக் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த போலீசாரின் தீவிர விசாரணையில், கேதன் அகர்வாலை கொலை செய்தது வேறு யாரும் அல்ல, அவருக்கு விரைவில் மனைவியாக வரவிருந்த சியா கோயல் மற்றும் அவளது காதலர் சேத்தன் சௌத்ரி ஆகிய இருவரும்தான் என்பது அம்பலமாகியுள்ளது. இதுகுறித்து போலீசார் நடத்திய சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலான அதிரடி விசாரணையில் சியா கோயலின் சுயரூபம் வெளிப்பட்டு அவளது சதித்திட்டம் அம்பலமானது.

இந்த கொடூரக் கொலையில் சியா கோயலின் தொடர்பு உறுதியானதும், அவளது சொந்த பெற்றோரமே அவளுக்கு ஆதரவாக நிற்காமல் அவளது செயலைக் கண்டு அதிர்ச்சியடைந்து அவளை முழுமையாகக் கைவிட்டுள்ளனர். காவல்துறையின் தீவிர விசாரணையின் மூலம் இந்த கொலை வழக்கின் முழு சதியும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.