தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக மேலும் ஒரு இளம் மாணவி தற்கொலை செய்துகொண்ட நெஞ்சை உலுக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் வெள்ளாளபுரம் பகுதியைச் சேர்ந்த கோபிகா என்ற மாணவி, கடந்த மாதம் நடைபெற்ற நீட் தேர்வை எழுதியிருந்தார். இந்தச் சூழலில், நாடு முழுவதும் ஜூன் 21-ஆம் தேதி நீட் மறுதேர்வு (Re-test) நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் ஏற்பட்ட கடுமையான மன அழுத்தமும், தேர்வு குறித்த பயமும் அந்த மாணவியைச் சூழ்ந்ததால், மனமுடைந்த கோபிகா தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீட் தேர்வின் குளறுபடிகளால் அடுத்தடுத்து மாணவச் செல்வங்கள் தங்களது உயிரை மாய்த்துக் கொள்ளும் இந்தச் சோகச் சம்பவம், தமிழக மக்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
