டென்மார்க்கில் வசிக்கும் நிக் பிஷ்ட் என்ற இந்திய ஐடி ஊழியர், அந்நாட்டின் கோடைக்கால மாலை நேரங்கள் குறித்த வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் இரவு 9 மணி ஆனாலும், சூரிய ஒளி குறையாமல் மாலை நேரம் போலவே வானம் பிரகாசமாக இருப்பதை அவர் காட்டியுள்ளார்.

தூங்குவதற்கு உடலைத் தயார்படுத்த, அறையில் உள்ள திரைச்சீலைகளை முழுமையாக மூடி இருளை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும், திரையை விலக்கியவுடன் மீண்டும் வெளிச்சம் தெரிவது ஆச்சரியமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

புவியியல் ரீதியாக டென்மார்க் வடக்கு ஐரோப்பாவில் அமைந்திருப்பதால், கோடைக்காலங்களில் அங்கு பகல் பொழுது நீண்ட நேரம் நீடிக்கிறது. இது போன்ற வட ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் பலர், தூக்கத்தைச் சீராகப் பராமரிக்க அடர்த்தியான திரைச்சீலைகளை பயன்படுத்துவது அவசியம் எனக் குறிப்பிடுகின்றனர்.வெ

 

View this post on Instagram

 

A post shared by Nick Bisht (@nickbishtvlogs)

“>

ளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு மொழி மற்றும் உணவு ஒருபுறம் சவாலாக இருந்தாலும், இது போன்ற வித்தியாசமான காலநிலையை எதிர்கொள்வது ஒரு புதிய அனுபவமாக இருப்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது.