“ஒரு தப்பான விஷயத்தை இப்படியா விளம்பரம் செஞ்சு நுகர்வோர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குவீங்க, இது ரொம்ப அருவருப்பானது !” என்று பாகிஸ்தான் டியூரெக்ஸ் நிறுவனம் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புதிய ஆணுறை விளம்பரப் பதிவு உலகளவில் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையையும், நுகர்வோர் மத்தியில் கடுமையான கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

உலகளவில் 250 மில்லியன் டாலருக்கும் மேல் வசூலித்து மெகா சாதனை படைத்த ‘அப்செஷன்’ என்ற பிரபல திகில் திரைப்படத்தின் காட்சிகளை மையமாக வைத்து இந்த விசித்திர விளம்பரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நச்சுத்தன்மையுள்ள உறவுகள் மற்றும் பரஸ்பர சம்மதமில்லாத உடலுறவுச் சூழல் சித்தரிக்கப்பட்ட அந்தப் படத்தின் விவாதக் காட்சியை மையப்படுத்தி, “அவளை உன் மீது பைத்தியமாக ஆக்கு” என்ற வாசகத்துடன், படத்தின் முக்கியக் குறியீடான மரத்தின் அருகில் ஆணுறை இருப்பது போல இந்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது;

சம்மதமில்லாத உடலுறவை ஊக்குவிக்கும் விதமாக இந்த விளம்பரம் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள சர்வதேச இணையவாசிகள், இது சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்று தங்களது கடுமையான கண்டனங்களையும் சமூக ஊடக எதிர்வினைகளையும் மிக ஆக்ரோஷமாகப் பதிவு செய்து வருகின்றனர்.