சமீபத்தில் கால்பந்து உலகக் கோப்பை போட்டிகளின் போது, மைதானத்தில் அமர்ந்திருக்கும் அழகான ரசிகைகள் போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. ஜப்பான் – நெதர்லாந்து போட்டியின் போது எடுக்கப்பட்டது போல பகிரப்பட்ட அந்த வீடியோக்களில், ரசிகைகள் மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் காட்சியளித்தனர்.

ஆனால், அவை அனைத்தும் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டவை என்பது பின்னர் தெரியவந்தது. அந்தப் பெண்களின் முகங்கள் மிகச் சரியாகச் சமச்சீராக இருப்பதும், அவர்களின் அசைவுகளில் இயல்பான தன்மை இல்லாமல் இருப்பதையும் கவனித்த நெட்டிசன்கள், அவை போலியானவை என்பதை ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தினர்.

இத்தகைய நிகழ்வுகள், இணைய உலகில் உண்மைக்கும் போலிக்கும் இடையிலான இடைவெளி மறைந்து வருவதை உணர்த்துகின்றன. உண்மையான ரசிகர்களின் உணர்ச்சிகரமான கொண்டாட்டங்கள் மற்றும் மைதானத்தின் எதார்த்தமான சூழலுக்குப் பதிலாக, அல்காரிதம்களால் உருவாக்கப்பட்ட மிகச் சரியான பிம்பங்களுக்கு இணையத்தில் அதிக வரவேற்பு கிடைப்பது கவலையளிப்பதாக உள்ளது.

“>

 

கால்பந்து என்பதே உண்மையான மனித உணர்வுகளையும், எதிர்பாராத தருணங்களையும் உள்ளடக்கியது. ஆனால், இணைய உலகம் அழகுக்கும் நேர்த்திக்கும் முன்னுரிமை அளிப்பதால், எது உண்மை எது போலி என்று பிரித்தறிய முடியாத குழப்பமான சூழலில் நாம் சிக்கியுள்ளோம்.