2023-ம் ஆண்டு காசாவில் நடந்த இஸ்ரேலியத் தாக்குதலின் போது, பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த சிறுவன் முகமதுவின் வீடியோ உலகையே உலுக்கியது. அந்தப் போரின் கொடூரத்தைப் பிரதிபலிக்கும் முகமாக மாறிய அந்தச் சிறுவனை, தற்போது புகைப்படக் கலைஞர் மொடாஸ் அஸைசா மீண்டும் சந்தித்துள்ளார்.
இது குறித்த வீடியோவை அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில், அன்று அதிர்ச்சியில் உறைந்து போயிருந்த முகமது, இன்று புன்னகையுடனும் ஆரோக்கியமாகவும் இருப்பதைப் பார்க்கும்போது பலருக்கும் நெகிழ்ச்சியான தருணமாக அமைந்துள்ளது. போரின் வடுக்களைத் தாண்டி அவன் இப்போது நம்பிக்கையுடன் இருப்பதைப் பார்த்துப் பலரும் நெகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
காசாவில் போர் தொடர்ந்து கொண்டிருக்கும் சூழலில், இந்தச் சிறுவனின் மீட்சி ஒரு சிறிய நம்பிக்கையை அளித்துள்ளது. கடந்த 2023 அக்டோபர் முதல் நடந்த தாக்குதல்களில் இதுவரை 72,000-க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர், அதில் 21,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் என்பது மனதை அதிரவைக்கும் புள்ளிவிவரமாகும்.
View this post on Instagram
“>
இவ்வளவு பெரிய துயரங்களுக்கு மத்தியிலும், முகமதுவைப் போலப் பல குழந்தைகள் இன்றும் உயிர் பிழைக்கப் போராடி வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான ஆதரவை மீண்டும் முன்னுக்குக் கொண்டு வந்துள்ளது.
