துபாய் விமான நிலையத்தில் ஸ்டாண்ட்-அப் காமெடியன் முனாவர் ஃபாரூக்கி, பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடியைச் சந்தித்து நலம் விசாரித்து, கட்டிப்பிடித்துப் பேசிய வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. இந்திய ராணுவத்தையும், இந்தியாவையும் தொடர்ந்து மிகக் கேவலமாக விமர்சித்து, காஷ்மீர் விவகாரத்தில் நஞ்சைக் கக்கி வரும் அப்ரிடியை, இந்தியாவைச் சேர்ந்த ஒரு காமெடியன் இப்படி நேரில் சந்தித்துக் கொண்டாடுவதைப் பார்த்த நெட்டிசன்கள் முனாவர் ஃபாரூக்கிக்கு எதிராகக் கடுமையாகப் பாய்ந்து வருகின்றனர்.

​”இந்த நாட்டுல இருந்துக்கிட்டே எல்லா புகழையும், பணத்தையும் சம்பாதிச்சிட்டு, கடைசியில நம்ம நாட்டைத் திட்டுறவன்கூடப் போய் ஜாலியா டைம் பாஸ் பண்றீங்களே” என நெட்டிசன்கள் இணையத்தில் ஆவேசமாக முனாவரை வறுத்தெடுத்து வருகின்றனர். முன்பு ஸ்ரீராமரையும் சீதா தேவியையும் அவமதித்துப் பேசி ஜெயிலுக்குப் போனவர் தான் இந்த முனாவர் ஃபாரூக்கி என்று சுட்டிக்காட்டும் மக்கள், இந்தியாவிற்கு எதிராகத் தீவிரவாதக் கருத்துக்களைப் பரப்பும் அப்ரிடியைச் சந்தித்த முனாவர் மீது மத்திய அரசும், மும்பை போலீசாரும் உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுத்து விசாரணை நடத்த வேண்டும் எனப் பிரதமரின் அலுவலகம் (PMO) வரை டேக் செய்து ஆன்லைனில் அதிரடிப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர்.