தமிழகத்தை வளம்மிக்க மாநிலமாக மாற்ற முதலமைச்சர் விஜய் அவர்கள் எடுத்து வரும் பொருளாதார நடவடிக்கைகள் தேசிய அளவில் கவனத்தைப் பெறத் தொடங்கியுள்ளன. தமிழ்நாட்டை ‘1.5 டிரில்லியன் டாலர்’ (1.5 Trillion Dollar) பொருளாதாரமாக உயர்த்த வேண்டும் என்ற முதலமைச்சர் விஜய்யின் அசுரத்தனமான பொருளாதார இலக்கு, தற்போது டெல்லி அதிகாரிகளையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

​இந்திய அரசின் கொள்கை வகுக்கும் முக்கிய அமைப்பான நிதி ஆயோக்கின் (NITI Aayog) துணைத்தலைவர் அசோக் குமார் லஹிரி, முதலமைச்சர் விஜய்யின் இந்தத் தொலைநோக்கு பார்வைகொண்ட இலக்கு தமக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகப் பேசிய அவர், இதுவரை திரையில் மட்டுமே பார்த்து ரசித்த முதலமைச்சர் விஜய்யை தற்போது நேரில் சந்தித்துப் பேசுவது தமக்கு மட்டற்ற மகிழ்ச்சியையும், நெகிழ்ச்சியையும் தருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தின் பொருளாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முதலமைச்சர் விஜய் வகுத்துள்ள இந்த மாஸ் பிளான், ஒட்டுமொத்த இந்திய அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும், பாராட்டுகளையும் குவித்து வருகிறது.