தமிழக சட்டமன்ற வரலாற்றில் ஒரு முக்கிய அதிரடி நகர்வாக, சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகளை மேம்படுத்த சபாநாயகர் JCD பிரபாகரன் அவர்கள் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, வரும் ஜூன் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான (MLAs) சிறப்பு புத்தாக்க பயிற்சி முகாம் நடைபெற உள்ளதாக அவர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
சட்டமன்றப் பேரவை கூடும் போது உறுப்பினர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும், மக்கள் பிரச்சினைகளை எப்படிப் பேரவையில் எடுத்துரைக்க வேண்டும், மற்றும் அமைச்சர்களிடம் எப்படித் துல்லியமாகக் கேள்விகளை எழுப்ப வேண்டும் என்பது குறித்து இந்த முகாமில் விரிவாகக் கற்றுத்தரப்பட உள்ளது. இதற்காகப் பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்களைக் கொண்டு இந்தச் சிறப்புப் பயிற்சிக்குச் சபாநாயகர் ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த வகுப்பில் பழைய உறுப்பினர்கள், புதிய உறுப்பினர்கள் என்ற பாகுபாடின்றி அனைவரும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று சபாநாயகர் JCD பிரபாகரன் அதிரடி அழைப்பு விடுத்துள்ளார். சபாநாயகரின் இந்த அதிரடிப் பயிற்சித் திட்டம், சட்டமன்றக் கூட்டத்தொடரை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
