உலக அளவில் பதற்றமான சூழல் நிலவும் ஹார்மூஸ் நீரிணையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் அதிநவீன ஹெலிகாப்டரை ஈரான் ராணுவம் திடீரென சுட்டு வீழ்த்திய விவகாரம் உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயங்கர தாக்குதலின் போது ஹெலிகாப்டரில் பயணித்த இரண்டு அமெரிக்க பைலட்களும் நூலிழையில் கடலில் குதித்துத் உயிர் தப்பியுள்ளனர்.
கடலின் நடுவே தத்தளித்துக் கொண்டிருந்த அவர்களை, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வைபவ் அல்டேகர் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாகப் பணியாற்றும் சரோனிக் டெக்னாலஜிஸ் நிறுவனம் தயாரித்த ‘கார்சேர்’ என்ற அதிரடி ட்ரோன் வெறும் 2 மணி நேரத்தில் உயிருடன் மீட்டு உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்க ராணுவ வீரர்களின் உயிரைக் காப்பாற்றிய இந்த அதிநவீன ‘கார்சேர்’ ட்ரோன், சுமார் 1000 நாட்டிக்கல் மைல் தூரம் வரை மிகத் துல்லியமாகச் சென்று இயங்கும் வல்லமை படைத்த ஒரு ரிமோட் கண்ட்ரோல் ட்ரோன் ஆகும். ஈரான் ராணுவத்தின் தாக்குதலுக்குப் பிறகு கடலில் பைலட்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தேடுவதே மிகப்பெரிய சவாலாக இருந்த நிலையில், இந்த இந்திய தயாரிப்பு தொழில்நுட்பம் மிகக் குறுகிய காலத்தில் அவர்களின் இருப்பிடத்தைக் கண்டறிந்து மீட்டெடுத்துள்ளது.
வல்லரசு நாடான அமெரிக்காவின் ராணுவ வீரர்களையே ஒரு இந்தியரின் மூளையில் உதித்த தொழில்நுட்பம் காப்பாற்றியுள்ள இந்த மாஸ் சம்பவம், தற்பொழுது சர்வதேச அளவில் இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் உச்சிக்குக் கொண்டு சென்றுள்ளது
