ஆதித்யா தர் இயக்கத்தில், ரன்வீர் கபூர் நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான ‘துரந்தர்’ திரைப்படம் உலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் சாதனையைப் படைத்தது. இப்படத்தில் சாரா அர்ஜூன் நாயகியாகவும், மாதவன் மற்றும் அக்ஷய் கண்ணா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தனர. முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, இதன் இரண்டாம் பாகம் நடப்பாண்டில் வெளியானதுடன், இரண்டு பாகங்களும் சேர்ந்து பாக்ஸ் ஆபிஸில் ரூ.3000 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்துச் சாதனை படைத்தன.
தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ள இப்படத்தின் இரண்டு பாகங்களும் பார்வையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்று வருகின்றன. நடப்பாண்டில் இதுவரை நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிய இந்தியத் திரைப்படங்களிலேயே ‘துரந்தர்’ மிக அதிக அளவிலான பார்வைகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதுவரை இப்படம் 3.7 கோடி வியூஸ்களைக் கடந்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வு ஒன்றில் பேசிய நெட்பிளிக்ஸ் தலைவர் டெட் சரண்டோஸ், ஆங்கிலம் அல்லாத திரைப்படங்களில் ‘துரந்தர்’ உலக அளவில் மிகப்பெரிய சாதனையைப் படைத்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளைத் தாண்டி பல ஆங்கிலப் படங்களையும் விட அதிகமான பார்வைகளைப் பெற்று இப்படம் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதாக அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
