சீனாவின் யோங்சுவான் மாவட்டத்தில் அமைந்துள்ள லோகாஜாய் விலங்குகள் பூங்காவில், அங்கு வசித்து வரும் மிகவும் அரிய வகையான “சிவப்பு பாண்டா” (Red Panda) ஒன்றின் பிறந்தநாளை முன்னிட்டு பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட தனித்துவமான பிறந்தநாள் விருந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்தச் செல்லப் பிராணியின் பர்த்டே ட்ரீட்டிற்காகக் குளிர்ச்சியான தர்பூசணியை அழகிய தட்டு போலச் செதுக்கி, அதன் மேல் சிவப்பு பாண்டாக்களுக்கு மிகவும் பிடித்தமான புதிய திராட்சை, ஆப்பிள், வாழைப்பழம் மற்றும் பிளம்ஸ் போன்ற பலவகை பழங்களை குச்சிகளில் குத்தி மிக நளினமாக அடுக்கிக் கொடுத்து அசத்தியுள்ளனர் பூங்கா ஊழியர்கள்.
தங்களுக்குப் படைக்கப்பட்ட இந்த அசத்தல் பழ விருந்தை அந்த ரெட் பாண்டா மிகவும் சுவைத்து, ஆசையோடு சாப்பிடும் க்யூட்டான புகைப்படங்களும் காட்சிகளும் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி, உலகெங்கிலும் உள்ள நெட்டிசன்களைக் கவர்ந்து செம ட்ரெண்டாகி வருகிறது.
