தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தொடங்கியுள்ள புதிய மக்கள் இயக்கத்தில் இணைபவர்களின் எண்ணிக்கை தற்பொழுது மிகக் குறுகிய காலத்திலேயே லட்சங்களைக் கடந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணாமலை தொடங்கியுள்ள “We The Leaders” (இது நம்ம இயக்கம்) என்ற புதிய அமைப்பில் ஆன்லைன் மூலமாக மக்கள் தங்களை இணைத்துக் கொண்டு வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி, இந்த இயக்கத்தில் தீவிரமாகச் செயல்படும் உறுப்பினர்களின் (Active Leaders) எண்ணிக்கை 5 லட்சத்து 7 ஆயிரத்து 811 ஆக உயர்ந்து, மிக வேகமாக 5 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

அண்ணாமலையின் இந்த அரசியல் அழைப்பை ஏற்று, பாஜகவில் இருந்து தற்பொழுது ஏராளமான தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் தங்களது கட்சியில் இருந்து விலகி இந்த புதிய அமைப்பில் தொடர்ந்து இணைந்து வருகின்றனர்.

தமிழக அரசியல் களத்தில் புதிய திருப்பமாகப் பார்க்கப்படும் இந்த எளிய மற்றும் எதார்த்தமான நேரடி அரசியல் செய்தி, தற்பொழுது சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் மத்தியில் படுவேகமாகப் பகிரப்பட்டு இணையம் எங்கும் செம வைரலாகி வருகிறது.