தமிழகத்தில் நடைபெறவிருக்கும் ராஜ்யசபா இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரவீண் சக்கரவர்த்தி தனது வேட்புமனுவை அதிரடியாகத் தாக்கல் செய்துள்ளார். தவெக தலைமையிலான கூட்டணியில், தங்களுக்குக் கிடைத்த ஒரே ஒரு ராஜ்யசபா எம்பி சீட்டை கூட்டணி கட்சியான காங்கிரஸுக்காக தவெக தலைமை விட்டுக் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் டெல்லி தலைமை பிரவீண் சக்கரவர்த்தியைத் தங்களின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவித்தது.

​இந்நிலையில், இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை செயலாளர் சாந்தி அவர்களை நேரில் சந்தித்த பிரவீண் சக்கரவர்த்தி, முதலமைச்சர் விஜய் அவர்களின் முன்னிலையில் தனது வேட்புமனுவை முறைப்படி தாக்கல் செய்துள்ளார். தவெக அரசு அமைந்த பிறகு நடக்கும் முதல் ராஜ்யசபா தேர்தல் என்பதால், முதல்வர் விஜய் முன்னிலையில் நடைபெற்ற இந்த வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.