பிரபல இந்தி சீரியலான ‘பாபிஜி கர் பர் Hain’ தொடரின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான நடிகை ஷில்பா ஷிண்டே, அந்தத் தொடரின் தயாரிப்பாளர் சஞ்சய் கோலி மீது தான் கொடுத்த பாலியல் வன்கொடுமை (Sexual Harassment) புகார் முற்றிலும் “பொய்யானது” என்று 9 ஆண்டுகளுக்குப் பிறகு பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளது ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர வைத்துள்ளது. சமீபத்தில் பாரதி சிங் மற்றும் ஹர்ஷ் லிம்பாச்சியாவின் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், இந்த உண்மையை ஓப்பனாக ஒப்புக்கொண்டுள்ளார்.

​இதுகுறித்து அவர் பேசுகையில், “இதை நான் அப்போதே சொல்லியிருக்க வேண்டும், ஆனால் ஊடகங்களில் பேசக்கூடாது என்று எங்களுக்குள் அக்ரிமெண்ட் இருந்ததால் பேச முடியவில்லை. 2016-ல் தயாரிப்பாளர்களுடன் ஏற்பட்ட ஒப்பந்தப் பிரச்சினை மற்றும் 3 மாத சம்பளப் பாக்கி காரணமாகத்தான் நான் சீரியலை விட்டு வெளியேறினேன். என் பணத்தைத் தராமல் இழுத்தடித்ததால், வேறு வழியே இல்லாமல்தான் 2017-ல் தயாரிப்பாளர் மீது பாலியல் புகார் கொடுத்தேன்.

அதன் பிறகு எங்களுக்குள் சமரசம் (Settlement) ஏற்பட்டு என் சம்பளப் பாக்கி கைக்கு வந்தது” என்று அதிர்ச்சி வாக்குமூலம் கொடுத்துள்ளார். வியூஸுக்காகவும், பணத்திற்காகவும் சட்டத்தையும், பாலியல் புகாரையும் இப்படி தவறாகப் பயன்படுத்திய நடிகை ஷில்பாவுக்கு எதிராக தற்போது நெட்டிசன்கள் அல்காரிதம்களை அதிர வைத்து தங்களது கடுமையான கண்டனங்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.