“சிறுவயதில் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் இல்லாததால், தனது குழந்தை பருவத்தையே இழந்ததாக உலகப் புகழ்பெற்ற பாப் அரசன் மைக்கேல் ஜாக்சன் குறிப்பிட்டிருப்பார். ஆனால், எங்கள் வீட்டிலும் சிறுவயதில் எந்தவொரு கொண்டாட்டமும் இருந்தது கிடையாது; அதற்காக நான் எனது குழந்தை பருவத்தை இழந்துவிட்டதாகக் கருதவில்லை” என இசையமைப்பாளர் இளையராஜா நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.

​தொடர்ந்து பேசிய அவர், ஆடம்பரக் கொண்டாட்டங்கள் மட்டுமே குழந்தைகளுக்கு மகிழ்ச்சியைத் தந்துவிடாது என்று சுட்டிக்காட்டினார். “குழந்தைகள் எப்போதும் குழந்தைகள் தான், அவர்கள் தங்களுக்குக் கிடைக்கும் சூழலில் எப்போதும் சந்தோஷமாகத்தான் இருப்பார்கள்” என்று எதார்த்தமாக இளையராஜா பகிர்ந்துள்ள இந்த எமோஷனல் கருத்து தற்போது சோஷியல் மீடியாவில் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.