”என்னப்பா இது, இப்படியெல்லாம் கூட செய்வார்களா?!” என்று கேட்கும் அளவுக்கு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட 16 வினாடி வீடியோ ஒன்று தற்போது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. அதில், பர்தா அணிந்த பெண் ஒருவர் பச்சையான மாமிச எலும்பைக் கடித்து உண்பதும், அதைச் சுற்றியுள்ளவர்கள் வேடிக்கை பார்த்து ரசிப்பதும் போன்ற அதிர்ச்சியூட்டும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
கடந்த 2025 நவம்பர் மாதம் பாகிஸ்தான் அல்லது வங்கதேசத்தில் உள்ள இறைச்சிக் கடை ஒன்றில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த வீடியோ, தற்போதைய சூழலில் இணையவாசிகளைப் பெருமளவில் உலுக்கியுள்ளது. இந்த வீடியோவைச் சுட்டிக்காட்டிய இஸ்கான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ராதாரமண் தாஸ், இவர்கள் உலகிற்கே ஆபத்தானவர்கள் எனக் கருத்து தெரிவிக்க, நெட்டிசன்களோ இவர்களைச் சமூகத்திலிருந்து ஒழிக்க வேண்டும் என்று மிகக் கடுமையான வெறுப்புப் பேச்சுகளைக் கொட்டி வருகின்றனர்.
Even devils will get an inferiority complex after watching them. pic.twitter.com/L8J9kWSONj
— Kreately.in (@KreatelyMedia) June 1, 2026
பிராந்திய ரீதியாக ஆடு அல்லது மாட்டு எலும்புக் கறி சில இடங்களில் வழக்கமான உணவாக இருந்தாலும், இது குறிப்பிட்ட சமூகத்தினரை வம்புக்கு இழுக்க திட்டமிட்டுப் பரப்பப்படும் வீடியோ என்றும் குற்றம் சாட்டுகின்றனர். இருப்பினும், உலக அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் இந்த வீடியோவின் அசல் பின்னணியோ அல்லது அதன் உண்மைத் தன்மையோ இன்னும் அதிகாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.
