காசா மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து நடத்தி வரும் மிகக் கொடூரமான தாக்குதல்களால் அங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாகச் சிதைந்துள்ளதோடு, மரணங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து நெஞ்சை உலுக்கி வருகிறது.
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் தற்போது வரை இஸ்ரேல் வான்வழியாகவும் நிலவழியாகவும் தொடுத்து வரும் இந்தத் தொடர் போர்த் தாக்குதல்களில் சிக்கி, இதுவரை 72,819 பேர் பரிதாபமாகத் தங்களது உயிர்களை இழந்துள்ளனர்.
போர் நிறுத்த ஒப்பந்தங்கள் பேசப்பட்டாலும் கூட, காசாவில் பிஞ்சுக் குழந்தைகள், பெண்கள் எனப் பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் கொத்துக்கொத்தாகப் பலியாகி வரும் இந்தச் சர்வதேசத் துயரம், உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கடுமையான கவலையையும் ஏற்படுத்தி வருகிறது.
