ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி, ரசிகர்களின் மனதை கவர்ந்த உதயநிதி ஸ்டாலின், இறுதியாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘மாமன்னன்’ படத்தில் நடித்திருந்தார். அவரது திரைப்பயணத்திலேயே மிக முக்கிய படமாக அமைந்த மாமன்னன் வெற்றிக்குப் பிறகு, அவர் சினிமாவில் இருந்து முழுமையாக விலகி அரசியலில் தீவிர கவனம் செலுத்தினார்.

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் வென்று அமைச்சராகவும், பின்னர் தமிழகத்தின் துணை முதல்வராகவும் பொறுப்பேற்ற அவர், தற்போது சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்து வருகிறார்அரசியலில் படு பிஸியாக இருந்து வரும் உதயநிதி ஸ்டாலின், தற்போது மீண்டும் படங்களில் நடிக்க கவனம் செலுத்த உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக, நிஜ வாழ்க்கையைப் போலவே சினிமாவுக்குள்ளும் ஒரு அரசியல் கதைக்களத்தை மையமாகக் கொண்ட கதைகளில் நடிக்க அவர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், உதயநிதியின் தயாரிப்பு நிறுவனமான ‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ நிறுவனத்தின் ஒட்டுமொத்த தலைமைப் பொறுப்பையும் அவரது மகன் இன்பநிதி ஏற்றுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.