இன்றைய காலகட்டத்தில் சொத்துக்காகவும், நிலத்திற்காகவும் கூடப்பிறந்த அண்ணன், தம்பிகள் மற்றும் அக்கா, தங்கைகளுக்குள் அடிதடி, கோர்ட், கேஸ் எனப் சண்டைகள் அதிகரித்து வரும் நிலையில், உடன்பிறந்த பாசத்திற்கு இலக்கணமாக மாறியுள்ள ஒரு அக்காவின் எமோஷனல் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி ஒட்டுமொத்த நெட்டிசன்களையும் நெகிழ வைத்துள்ளது.

வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒரு பெண் விவசாய நிலத்தில் தனது மூன்று தம்பிகளுடன் நின்று கொண்டு மிகவும் உருக்கமாகப் பேசுகிறார். அவர் பேசுகையில், “இது என்னுடைய தந்தையின் நிலம், அவர் மறைந்த பிறகு இந்த நிலம் என்னுடைய தம்பிகளுக்குச் சொந்தமானது; இந்த நிலத்தில் எங்களுக்கு (அக்கா, தங்கைகளுக்கு) எந்தவிதமான பங்கும், சொத்து உரிமையும் தேவையில்லை என்று நாங்கள் மூன்று சகோதரிகளும் ஒருமனதாக முடிவு செய்துள்ளோம்” என்று பெருந்தன்மையுடன் கூறுகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Sukaml Patil (@sukamlpatil)

மேலும், “இன்றைய சூழலில் சொத்துக்காகச் சண்டை போடுவதைத் தவிர்த்து, எல்லா அக்கா, தங்கைகளும் தங்களது தம்பிகளின் நலனைக் கருதி இப்படித்தான் யோசிக்க வேண்டும்; நமக்குள் இருக்கும் அண்ணன், தங்கை பாசம் காலத்திற்கும் மாறாமல் அப்படியே நீடிக்க வேண்டும்” என்று அவர் உருக்கமாகத் தம்பிகளிடம் பேசுகிறார்.

அக்காவின் இந்த எதிர்பாராத பாசப் பேச்சைக் கேட்டு நிலைகுலைந்து போன தம்பிகள் மற்றும் குடும்பத்தினர், நடுரோட்டிலும் நிலத்திலும் நின்றபடியே ஆனந்தக் கண்ணீர் விட்டு அழத் தொடங்குகின்றனர்.

‘சுகம்ல்பாட்டீல்’ (sukamlpatil) என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டு, லோக்சத்தா இணையதளத்தில் வெளியாகியுள்ள இந்த எமோஷனல் வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “இப்படிப்பட்ட அக்கா கிடைக்க ஒவ்வொருத்தரும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்” என்றும், “அக்காவின் இந்த வளர்ப்பு மற்றும் குடும்பத்தின் பண்புதான் மிகச் சிறந்தது” என்றும் தங்களது பாராட்டுகளை வாரி இறைத்து வருகின்றனர்.