தமிழக மின்சாரத்துறை தற்போது சுமார் 2.5 லட்சம் கோடி ரூபாய் கடனில் மூழ்கியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ள நிலையில், இதுகுறித்து மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களிடம் அதிரடியான விளக்கத்தை அளித்துள்ளார். அவர் பேசுகையில், “இதுவரை பதவியில் இருந்த பழைய திமுக அரசு, மின்சாரத்துறையின் பல இடங்களில் பயங்கரமான முறைகேடுகளையும், விதிமீறல்களையும் செய்து வைத்துள்ளது.
இதுதொடர்பான பல முக்கிய வழக்குகள் தற்போது சிபிஐ (CBI) வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன” என்று அதிரடியாகப் போட்டுடைத்துள்ளார். மேலும் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், “முந்தைய நிர்வாகத்தின் முறைகேடுகளால்தான் இத்தனை வருடங்களாக இந்த நிறுவனம் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து, 2 லட்சம் கோடிக்கும் மேல் கடனில் வந்து நின்றிருக்கிறது.
கோடிக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தும் இந்த மின்சார வாரியத்தை முழுமையாகச் சீரமைத்து, முற்றிலும் லாபகரமான ஒரு நிறுவனமாக மாற்றக்கூடிய அனைத்து சாத்தியக்கூறுகளும் எங்களிடம் உள்ளன. அதற்கான புத்துணர்ச்சி கொடுக்கும் முயற்சிகளையும், தவறுகளைத் தடுக்கும் நடவடிக்கைகளையும் எங்கள் அரசு தற்போது முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
