புதுச்சேரி சட்டமன்றத்தில் புதிய எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்பு விழா நடைபெற்ற நிலையில், காமராஜர் நகர் தொகுதியில் வெற்றி பெற்ற தவெக எம்.எல்.ஏ ஜோஸ் சார்லஸ் மார்ட்டினின் தாயாரும், திருச்சி லால்குடி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ-வுமான லீமா ரோஸ், பார்வையாளர் மாடத்திலிருந்து தன் மகனின் பதவியேற்பை நேரில்கண்டு மகிழ்ந்தார். தொடர்ந்து அவர் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை நேரில் சந்தித்துப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லீமா ரோஸ், “எனது மகன் எம்.எல்.ஏ-வானது மிகுந்த சந்தோஷம்; அவர் அமைச்சராவது எல்லாம் இறைவன் சித்தம்தான். ஆனால், புதிய அமைச்சரவையில் தவெக தரப்பில் 8 அமைச்சர்கள் கேட்டதாக யூடியூப்பில் தவறான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். அவதூறு பரப்பும் அந்தச் சேனல்களுக்கு நாங்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம், அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுப்போம்” என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
